மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா…. சுவாமி தங்க சப்பரத்தில் வீதி உலா….

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 6 ம் நாளன்று சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனர்
இரவு வேடர் பறி லீலை திருவிளையாடல் நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர், பிரியா விடையுடன் தினமும் காலை – மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். திருவிழாவின் 6ம் நாளான்று சுவாமி, பிரியாவிடை மற்றும் அம்மன் ஆகியோர் தங்கச்சப் பரத்தில் எழுந்தருளினர். நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது வடக்கு மாசி வீதி மற்றும் ராமா யண சாவடி உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடையுடன் தங்க குதிரை வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் அம்ம னும் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். மீனாட்சி நாயக்கர் மண்ட பத்தில் இரவு 9.30 மணிக்கு வேடர் பறி லீலை திருவிளையாடல் நடைபெற்றது.

7ம் நாளன்று தங்க சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் வீதியுலா வந்து கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். இரவு 7.30 மணியளவில் தங்க ரிஷபம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருள உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *