தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல் லூரணி கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று மீன் கம்பெனிகளால் அங்கிருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவு நீரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மூன்று வருட காலமாக போராடி வருகின்றனர்

இதற்கு அரசும் அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர் அதன்படி கிராமத்தில் உள்ள 931 வாக்குகளின் சுமார் 40 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது

இந்த நிலையில் தேர்தல் புறக்கணிப்பை கைவிடக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முனகயா மற்றும் திமுகவினர் பொட்டலூரணி கிராமத்துக்கு வந்தன அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வர வேண்டாம் திரும்பி செல்லுங்கள் என்று கோஷமிட்டனர்

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது அதன் பின்பு பத்துக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கிராமத்திற்குள் நுழைந்தது இதனை அடுத்து கிராமத்தில் உள்ளவர்கள் ரவுடி கும்பலை பிடித்தனர் அதன்படி பிடிபட்ட ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் கூறப்பட்டது அதன் பின்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அதுபோல அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 50 ஆண்கள் 30 பெண்கள் உட்பட 80 பேர் மீதும் அது போல காவல்துறை வாகனத்தை அடித்து உடைத்ததாக கூறி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மீது மற்றொரு வழக்கும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மக்களின் வாழ்வதற்கு வசதி இல்லாத கிராமமாக மாறி உள்ள பொட்டல் ஊரணி கிராமத்தில் உள்ள உள்ள மீன் கம்பெனி கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று போராடியதற்காக ஊர் மக்கள் மீது இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *