ஏப்;-23

தென்காசி மாவட்டம் கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர்
மருத்துவர் ஆறுமுகம் தலைமையில் மரக்கன்றுகளை நடும் விழா நடைப்பெற்றது

மாவட்ட தொற்றா நோய் அலுவலர் மருத்துவர்.தண்டபாணி, நேர்முக உதவியாளர் தர்மலிங்கம்,நலக் கல்வியாளர் ஆறுமுகம்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன்,
வரவேற்று பேசினார் தென்காசி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார்

முன்னாதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலம் வழங்கிய நன் கொடையாளருடைய உறவினர் ஜிந்தா மாதர்க்கு பொன்னாடை அணிவித்து கொளரவிக்கப்பட்டது

இந்நிகழ்வில் வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அய்யனார்,சுகாதார ஆய்வாளர்கள் ஜெயகுளோரி, சாம்பேனியல், கண்ணன், கலைவாணன், மருந்தாளுனர்கள் ராமலெட்சுமி, பாக்கிய செல்வி, செவிலியர்கள் முத்துமாரி, சபீதா, மகரஜோதி , மனோ பாரதி, ஆய்வக நுட்பனர் ரேச்சல், ஆனந்த்,எம் எல் ஹெச் பி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர் ஆறுமுகம், இசக்கியம்மாள் மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ,ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் பகுதியைச் சார்ந்த பூவுலகை காப்போம் நண்பர்கள், மற்றும் இளந்தளிர் நண்பர்கள் நிர்வாகிகள் ராஜா, இளங்கோ, சாமுவேல் பிரபு உள்ளிட்ட நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்

நிறைவாக உலக பூமி தினத்தை முன்னிட்டு “மரக்கன்றுகளை வளர்ப்போம் இயற்கையை காப்போம்”என்ற அடிப்படையில் “உறுதிமொழி ” எடுத்து கொண்டனர்.

விழா முடிவில்வீராணம் மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிமாலா நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *