மதுரை அருகே வலையங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து

மதுரையில் கள்ளழகர் வைகையில் – இறங்கும் வைபவத்தை யொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது.

மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்நிலையில்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தானாக முளைத்த தனிலிங்கபெருமாள் சுவாமி கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி விடிய, விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிட்டத் தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி தலைமுறை தலைமுறை யாக சித்திரை பவுர்ணமியில், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு வலையங்குளம் கிராமத்தில் இந்த சமபந்தி விருந்து நடைபெறும். நேற்று நடந்த விருந்தில்,கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மெகா விருந்து நிகழ்விற்கு சமையலுக்கு 2% டன் அரிசி, 1 டன் துவரம் பருப்பு மற்றும் டன் கணக்கில் காய்கறிகள் சேகரிக்கப்பட்டு சமையல் செய்யப்பட்டு மெகா விருந்து நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக சென்று கள்ளழகரை தரிசிப்பார்கள் என்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *