மேலணிகுழி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய சாலை வசதி தூர்வாரும் பணியின் போது அகற்றம் சாலை வசதி செய்து கொடுக்க விவசாயி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி ஊராட்சி உட்பட்ட பாப்பாக்குடி மெயின் ரோடு முதல் கடலூர் மாவட்டம் எல்லையான பழஞ்சநல்லூர் வரை செல்லும் கருவாட்டு ஓடை என்கிற வடக்குவெளி ஓடையை தற்பொழுது பாப்பாக்குடி ஊராட்சி சார்பில் நீர்வளம் துறை மூலம் சுமார் 25 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது

அந்த வாய்க்காலில் ஓரமாக அருகில் இருக்கும் 100 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேலாக விவசாயி பயிர்கள் செய்து வருகிறார்கள் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தார் சாலை சென்றது சாலையை தற்போது தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் தூர்வாரம் பணி நடைபெற்று வருகிறது அதில் விவசாயிகளுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய தார் சாலை உடைக்கப்பட்டு அப்பணி முழுமை பெறாமல் ஆங்காங்கே குண்டும் குழியமாக உள்ளது மேலும் அந்த வாய்க்காலில்
உள்ளே

100 ஏக்கர் மேலாக விவசாயிகள் பயிர் செய்யும் வயல் வலிகளுக்கு மின் மோட்டார் களுக்கும் சப்ளை செய்யக்கூடிய மின்சார கம்பிகள் செல்கிறது

தற்பொழுது அப்பகுதியில் மணிலா சவுக்கு உள்ளிட்ட விவசாய பயிர்கள் செய்து வரும் விவசாயிகள் மணிலா பயிர்களை அறுவடை செய்து எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது அப்பகுதி விவசாயிகள் தார் சாலைக்கு பதில் கரையோரம் 5 மீட்டருக்கும் மேல் அகல படுத்தி கரை மீது தார்சாலை அமைத்து பாதை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளனர்

பாதையை அகற்றும் முன் அப்பகுதி விவசாயிகளுக்கு பாதை வசதி செய்து கொடுக்காததால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்

இது சம்பந்தமாக தூர்வாரிய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்ட பொழுது எங்கள் வேலை இவ்வளவுதான் நாங்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது தேவைப்பட்டால் நீங்களே சாலையை போட்டுக் கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது

ஏற்கனவே சென்ற சாலையை தாறுமாறாக உடைத்துவிட்டு தற்போதைய விவசாயிகளையே தார் சாலை போட்டுக் கொள்ள கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்

மேலும் விவசாயிகளுக்கு செல்லக்கூடிய சாலையை உடனடியாக அமைத்துக் கொடுக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி அரசியல் இயக்கங்கள் சாலை மறியல் செய்ய போவதாக கோரிக்கை வைத்துள்ளனர்

வெட்டப்படும் மண் விற்பனை செய்யப்படுவதாக புகார் மேலும் அந்த வாய்க்காலில் வெட்டப்படும் செம்மன்கள் சுமார் 20 ஆயிரத்தில் இருந்து விற்கப்படுவதால் 60 லட்சம் வரை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்து வருகிறார்கள்

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரிடையாக சென்று நடவடிக்கை எடுத்து அப்பகுதி விவசாயிகளில் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் எண்ணி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *