மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், 5,637 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு விமானக் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதி கட்டணம், உணவுக்கான செலவு என ரூ.3.75 லட்சம் செலவாகிறது.

இதில் அரசு சலுகை மற்றும் மானியமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. வரும் 26-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், கோவை மாவட்டத்தில் இருந்து ஆண்கள் பெண்கள் உள்பட 400 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில்,கோவை கரும்புக்கடை பகுதியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, மற்றும் ஷம்சுல் இஸ்லாம் ஹனபி ஜமாத் சார்பில், 23-வது ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் ஹாஜி அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பயிற்சியாளர் முகமது அபூபக்கர் சித்திக் பங்கேற்று ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஹஜ் பயணம் சென்று திரும்பி வரும் வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில்,கரும்புக்கடை சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அஜீஸ் பாகவி ஹஜ் கடமைகளின் சிறப்புகளைப் பற்றி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கோவை சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி இனாயத்துல்லா, கோவை கரும்புக்கடை சம்சுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் ,
ஹாஜி ஜெயினுலாப்தீன், அப்துல் ரஹ்மான், இனாயத் அலி , துணை தலைவர் பஷீர், பொதுச்செயலாளர் கபீர், உள்பட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *