மனிதகுலம் வாழ 21ம் நூற்றாண்டு கேள்விக் குறியாக உள்ளது தஞ்சையில் சி.மகேந்திரன்.

தஞ்சாவூர், ஏப்-24. தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் எதிர்வரும் 27. 28ம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவிழா நடைபெறவுள்ளது.

         இது குறித்து நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில். 21-ம் நூற்றாண்டின் மைய பகுதி மக்கள் வாழ்வதற்கு கேள்விக்குறியாகி உள்ளது. இன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மனித உறவுகளை சீரழிக்கிறது. 

மனிதகுலம் வாழும் பூமி பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இதை மாற்றியமைக்க உலகில் உள்ள வல்லுனர்கள் தத்தமது கருத்துகளை கூறிவருகின்றனர். இந்த நிலையில் மண்ணை காக்க தொலைநோக்கு பார்வையில்  நம்மாழ்வார் நமது நிலத்தில் ரசாயன உரம் பயன்படுத்தியது தான் பல்வேறு நோய்களுக்கு காரணமாக  உள்ளது என்று சிந்தித்தார் கூறியது இன்று உண்மையாகிறது.

 பசுமைப் புரட்சி எங்கெல்லாம் உருவாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் புற்றுநோய் உள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து மக்களைக் காக்க நம்மாழ்வார் கருத்தை சமூக சக்தியாக மாற்ற வேண்டும். இளைய தலைமுறையினர் நிலம், நீர் மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடும் இயக்கமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் செயல்படும். மண். மக்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களை தடுத்து இயற்கையை பாதுகாப்பதை வலியுறுத்தி நம்மாழ்வார் திருவிழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

 உடன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் யாழினிதவச்செல்வன். நாராயணன். வழக்கறிஞர் கவிமணி. கீரீன்நீடா அமைப்பின் ராஜ வேலு. தமிழ்நாடு தன்னார்வ அமைப்பின் ராம் பிரபு. உமாசங்கர். முகம்மது ரபீக். ஜோதிபாசு. விசிறி சாமியார் முருகன். ரத்தின குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *