தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் தொற்றுநோய் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்காக இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல் இருமல்/ சளி / வயிற்றுப்போக்கு வாந்திபேதி தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, வெறிநாய்கடி, மனிதர்கள்/ பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை தாங்களாகவே முன் வந்து கீழ்காணும் https//ihip.mohfw.gov.in/cbs/-1 என்ற இணையதளத்தில் பெயர், தொலைபேசி எண். வயது. வேலை கிராமம் மாவட்டம். மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம் மற்றும் தொற்றுநோய் குறித்த விவரம் போன்றவற்றை பதிவு செய்து அரசுக்கு தாங்களாகவே முன் வந்து தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளை நோய் பரவலைத் தடுக்க இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொள்ளை நோய் பரவலை தடுத்திட இந்த இணையதள வசதியினை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *