திருவொற்றியூர் மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல
தேரோட்டம் இங்கு குழந்தை வரம் வேண்டி பல தரப்பைச் சேர்ந்த மக்கள், பிரார்த்தனை மேற்கொள்வர் இந்நிலையில், இந்த கோவிலின், 46 ம் ஆண்டு பெருவிழா மிக விமர்சையாக கடந்த வாரம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவக்கியது.
ஆண்டுதோறும் மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் நடைபெறும் பெருவிழா கடந்த டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை 10 நாள் திருவிழாவாக
கொண்டாடும் நிலையில். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மிக விமர்சையாக நடந்தது
இதில், ஏராளமானோர் பங்கேற்பு அழகிய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னை மாதா மற்றும் குழந்தை இயேசு தேரினை மணலி புதுநகர் முக்கிய வீதிகளில் கிருத்துவ பாடல்களைப் பாடி பவானியாக சென்றனர்
46ம் ஆண்டு பெருவிழா, கடந்த டிச.,27ல் ஏராளமானோ பங்கு பெற்ற திருப்பலிகளுடன் கொடியோற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. முதல் விழாவின் சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்ற நிலையில் நேற்று மாலை முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஆலய பங்குத்தந்தை தங்க குமார் தலைமையில் எருக்கஞ்சேரி பங்குத்தந்தை சார்லஸ் குமார் முன்னிலையில் ஜெபமாலை திருப்பலி சிறப்பு நற்கருணை ஆசியுடன் அன்னை மாதா தேரில் முன்னே செல்ல குழந்தை இயேசு பாடல்களைப் பாடி தேர் பவனி ஆனது வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிக விமர்சையாக நடைபெற்றது.
இதில்,மணலிபுதுநகர் மட்டுமின்றி சென்னையின் அனைத்துபகுதிகளில் இருந்தும்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தேர், திருத்தலத்தை சுற்றியுள்ள தெருக்களில் வலம் வந்த போது,பாடல்கள் பாடியவாறு பக்தர்கள் பிரார்த்தனையுடன் நடந்து வந்தனர்.
நாளை மாலை கொடியிறக்க நிகழ்வுடன், விழா நிறைவு பெறுமென திருத்தலம் தரப்பில் தெரிவித்தனர்,