நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.இங்கு ரெயில் மூலமாக வந்து இறங்கும் பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இது தவிர சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் சிவப்பு நிற பஸ்கள் டிக்கெட் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி சென்று விடுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

பஸ்களை சந்திப்பு பஸ் நிலையம் அருகிலேயே நிறுத்திவிட்டு செல்லும்படியும், ரெயில் நிலையம் வரைக்கும் கொண்டு வர வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து பஸ்கள் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் அரசு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் ரெயில் நிலையம் முன்பு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்துக்கு நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்களுடன் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அவர்களுடன் நெல்லை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *