திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய இருதய மாற்று பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தனது தொகுதியில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்தி சிகிச்சைகளை அளித்து வருகிறார்.
அந்த வகையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து முகாமை நடத்தியது. வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றியம், வலங்கைமான் நகர பகுதியில் இலவச இருதய மாற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த மாதம் வலங்கைமான் குடவாசல் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாம்களில் 1,000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். தொடர்ந்து வலங்கைமான் ஒன்றியத்தில் இலவச இருதய சிகிச்சை மாற்றும் பொது மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் இருதயம் மற்றும் பொது மருத்துவம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை கள் செய்தனர்.
இந்த முகாமில் ரத்த அழுத்தம், இசிஜி, எஃகோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது. முகாமில் தஞ்சை ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் இனியன் இன்பன், வலங்கைமான் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் குமாரமங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வாசுதேவன், நகரச் செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், நகர அவைத் தலைவர் ரத்னகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.