தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 241 மனுக்களை பெற்றுக்கொண்டார்

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 231 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

இந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 56.000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும் 2 பயனாளிகளுக்கு ஊன்று கோல்களையும் மறமாவட்ட கலெக்டர் வழங்கினார் .

இதனைத் தொடர்ந்து REC நிறுவனத்தின் நிதி உதவியோடு இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் உதவியாளர் அடங்கிய மருத்துவக் குழு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுடன் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவச் சேவை வழங்கிடும் பொருட்டு நடமாடும் மருத்துவச் சேவை வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் திரு வி காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கவிதா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது பஞ்சாபகேசன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் கதிர்வேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *