பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிராமப்புற வேளாண்மை பணி பயிற்சி தொடக்க விழா…..
வேளாண் கல்வியின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமப்புற வேளாண்மை பணிப்பயிற்சி தொடக்க விழா ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை இயக்குனர் முகம்மது பாரூக் தலைமை வகித்தார் .
விழாவில் வேளாண்மை அலுவலர் பிரகதீஷ், துணை வேளாண் அலுவலர் எபினேஷன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன், கல்லூரி இயக்குனர் பாண்டியராஜன்,
கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பேராசிரியர்கள் சுந்தரவடிவு,அருண்குமார்,விஜய்சாரதி , ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டு மண் பராமரிப்பு, பயிர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை, மற்றும் விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
மேலும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர் இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவர்கள் விவசாயிகளிடம் இணைந்து களப் பணிகள் மேள்கொண்டனர்.
இதன் மூலம் விவசாய உற்பத்தி மேம்படுபடுவதன் மூலம் மாணவர்களின் தொழில் திறனும் வளர்ச்சி பெரும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் விவசாயிகளுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் உள்ளூர் விவசாயிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.