ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் அருப்புக்கோட்டை அருகே
உள்ள பெரிய தும்ம குண்டு கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பாடத் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீடு (PRA) நடத்தினர். இதில் இக் கிராம மக்களின் தேவைகள், வளங்கள், பிரச்சினைகளை அவர்களுடன் இணைந்து கண்டறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்தனர்.