கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
உதிரி பாகங்களின் வரலாறு காணாத விலை உயர்வால் ஆழ்குழாய் பணிகள் அமைக்க விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம்,மற்றும் வீடுகளுக்கான தேவைகள் என நிலத்தடி நீரை பெறுவதற்காக ஆழ்குழாய் கிணறு பணிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன..
ரிக் இயந்திரங்களைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட அளவுங கொண்ட ஆழமான துளையை நிலத்தில் தோண்டுவதற்கு முக்கிய கருவியாக பிட் எனும் உபகரணம் பயன்படுத்தப்ட்டு வருகின்றது பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிட் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணிகளில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இன்று முதல் ஒரு வார காலம் வேலை நிறுத்தம் நடைபெற உள்ள இதில்,கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கோயமுத்தூர் ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தேவையான பிட் மற்றும் உதிரி பாகங்களின் விலை தற்போது வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளதாகவும், இதனால் முன்பு செய்த போல குறிப்பிட்ட விலையில் பணிகளை செய்தால் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர்..
எனவே ஆழ்குழாய் பணிகள் அமைக்க விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்,இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என ரிக் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..