தமிழக காவல் துறையில் 42 ஆண்டுகள் பணி புரிந்து பல பல சாதனைகளை வென்ற கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து தனது பணியை நிறைவு செய்த உதவி ஆய்வாளர் சந்தானம் அவர்களுக்கு கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் அவர் செய்த சாதனைகளை எடுத்துரைத்து அவருக்கு கேடயம் வழங்கி மாலை அணிவித்து பாராட்டி அவரது இல்லத்தரசியையும் வாழ்த்தினார். அவருடன் கொளத்தூர் சரக காவல் உதவி ஆணையாளர் செந்தில்குமார் ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உதவி இன்ஸ்பெக்டர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள், பெண் காவலர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.