கோவையில் மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் இந்தியா லேர்ன்ஸ் (India Learns) ஐ.ஏ.எஸ்.அகாடமி துவக்கம்

தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாக அகாடமி இயக்குனர் அமன் குமார் துபே தகவல்

யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ்.போன்ற மத்திய அரசு உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக இந்தியா லேர்ன்ஸ் (India Learns) எனும் ஐ.ஏ.எஸ்.அகாடமி பயிற்சி மையம் கோவை காந்திபுரம் பகுதியில் துவங்கப்பட்டது…

இதற்கான துவக்க விழாவில் இந்தியன் இரயில்வே சேலம் டிவிஷன் சீனியர் டிவிஷன் பைனான்ஸ் மேலாளர் சித்ரா தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ்.அகாடமி மையத்தை திறந்து வைத்தார்…

இது குறித்து இந்தியா லேர்ன்ஸ் அகாடமி மையத்தின் இயக்குனர் அமன் குமார் துபே கூறுகையில்,கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தி மத்திய அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி வந்ததாக தெரிவித்தார்..

தற்போது நல்ல அனுபவமிக்க ஆசிரியர்கள், தரமான பாடத்திட்டம், நவீன வசதிகள் மற்றும் நல்ல உள்கட்டமைப்புடன் கூடிய வகுப்பறைகளை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்…

குறிப்பாக மத்திய அரசு பணி தேர்வு பாடங்களை நன்கு அறிந்த, அனுபவமிக்க ஆசிரியர்கள் பாடங்களை எளிமையாக புரியவைத்து, தேர்வு உத்திகளை கற்பிக்க உள்ளதாக கூறினார்..

மேலும் திறமைகள் இருந்தும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற தேவையான வசதிகள் இல்லாத, மாணவர்களுக்கு முழுவதும் இலவசமாக இந்தியா லேர்ன்ஸ் அகாடமியில் பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்த அவர்,இதில் தகுதி வாய்ந்த மாணவர்களை பல்வேறு கட்ட நுழைவு தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *