கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பாரி அக்ரோ நிறுவனத்தாருக்கு உட்பட்ட ஷேக்கல்முடி எஸ்டேட்டில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஸ்வரி, அந்தோணி தாஸ்,பேபி ராணி மற்றும் மூக்கம்மாள் ஆகியோர் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவரும் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீதுவை தொழிற்சங்க அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தனர்
அதைத்தொடர்ந்து புதிய பிரதிநிதிகளின் பணி சிறக்க தொழிற்சங்க தலைவர் வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் சலாவுதீன் அமீது, பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், அவைத்தலைவர் சுடர்பாலு, சீனி ராஜ், பெரியசாமி, அருணாசலம், ராமர், செல்வி, செல்வராஜ், சந்திரன், தெய்வானை, சுசிலா, மாடத்தி, ஷேக்கல்முடி பாத்திமா, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர்