வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
மனுக்களை மாலை அணிந்து ராமம் போட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதியினரால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, பச்சைமலையான் கோட்டை அருகே உள்ள உத்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவர் தனது கணவருடன் ராமம் போட்டும், மனுக்களை மாலையாக அணிந்தும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகை புரிந்தார். இதுகுறித்து ஜோதி கூறுகையில்:-நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவில் 2021 ஜூலை-13 ஆம் தேதி மனு அளித்தேன்.
இதையடுத்து அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிளார்க் சேர்ந்து வந்து வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லி கையெழுத்து வாங்கினர். பின்னர் சில நாட்கள் கழித்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிய வந்தது. அன்றிலிருந்து சுமார் 50க்கும் மேற்ப்பட்ட மனங்களை அளித்தோம். எங்களை அளைக்களிப்பு செய்து மிகவும் மன உளைச்சலுக்கு உண்டாக்கினர்.
இதையடுத்து 2 வருடங்கள் கழித்து 2022ல் வட்டாட்சியர் பட்டா வழங்கினார். இதற்கு இ பட்டா வழங்கவில்லை. இதையடுத்து மறுபடியும் மற்றொரு பட்டா வழங்கினர். இதுவரை இ பட்டா வழங்கவில்லை. கடந்த ஒரு வருடமாக இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் டிஆர்ஓ அலுவலகத்தில் போய் கேட்டால், இந்த பட்டா செல்லாது என்று கூறுகிறார்கள். அரசு கொடுத்த பட்டாவை, அரசு ஊழியர்கள் செல்லாது என்கின்றனர். அதனால் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமம் போட்டும், மனுக்களை மாலையாக அணிந்தும் மனு அளிக்க வந்தேன் என்று கூறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.