அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் களாக்குவேன் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்,சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான:
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9000/- வழங்க வேண்டும்.
மே மாத விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும்.
மினி மையங்களில் இருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமெண்ட் அல்லது பணியில் சேர்ந்த தேதியை கணக்கில் எடுக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
1993-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கி, பதவி உயர்வில் நேரடி நியமனத்தை கைவிட்டு, 100 சதவீத பதவி உயர்வை அங்கன்வாடி ஊழியர்களுக்கே வழங்க வேண்டும்.
அரசு புதிய நியமனங்களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி என்பதை கட்டாயமாக்காமல், 10 ஆண்டு பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உதவியாளர்
களுக்கும், 5 ஆண்டு பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, BLO பணியில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், “ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!” என முழக்கமிட்டு, அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்று தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மறியல் போராட்டத்தை சிஐடியு மாநில குழு உறுப்பினர் இரா. தெய்வராஜ் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வரத லட்சுமி பொருளாளர் ரமேஷ்வரி உள்ளிட்டு 1300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் உளள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.