இந்துஸ்தான கல்வி நிறுவனங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு நம் பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, எங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் வேட்டி அணிந்து வந்து நம் பாரம்பரிய ஆடையான வேட்டிக்கு பெருமை சேர்த்தனர்.
நம் தமிழக பாரம்பரிய உடையினை அணிவதன் சிறப்பினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வண்ணமாக, வண்ண வண்ண சட்டைகளுடன் வெள்ளை வேட்டி அணிந்து வந்த மாணவச்செல்வங்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.
கைத்தறி நெசவின் பெருமையை கட்டிக் காப்பாற்றும் வேட்டி, நம் பாரம்பரியத்தை மட்டும் அல்லாமல் உடல் நலத்தையும் பாதுகாப்பது நமக்கு தெரிய வேண்டிய ஒன்றாகும். இதனால் இந்த வேட்டி தினம் நம் இந்துஸ்தான் பள்ளி வளாகத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.