.
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடி அமோக கரும்பு விளைச்சல் – இப்பகுதி கரும்புகளை கொள்முதல் செய்ய இப்பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
தமிழர் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை, தை மாதம் முதல் தேதி கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் குளித்து விட்டு புத்தாடை அணிந்து புது அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பொங்கல் பண்டிகையின் போது முக்கிய இடத்தைப் பிடிப்பது கரும்பு ஆகும்.
இதையொட்டி நெல்லை மாவட்டம் அம்பை மேற்க்குதொடர்ச்சிமலை அடிவாரபகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கரும்பு மட்டும் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் சாகுபடி அமோகமாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகள் நான்கு அல்லது ஐந்து கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டியும், தோகைகளை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு பராமரித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சுமார் 15 நாட்களே உள்ள நிலையில், அரசு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை விவசாயிகளிடமிருந்தும், அரசு அதிகாரிகளிடமிருந்தும் எங்களிடம் இருந்து கரும்பை நேரடி கொள்முதல் செய்வது தொடர்பாக தொடர்பு கொள்ளவில்லை என விவசாயிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.
இது குறித்து கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு கரும்பு விதை ஆட்கள் கூலி, வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சுவது என சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. ஆனால் பெட்ரோல், வண்டி வாடகை ஏன் குவாட்டர் விலை கூட கூடி உள்ளது, எங்கள் கரும்பு விலை மட்டும் கூடவில்லை. மேலும் வியாபாரிகளோ, அரசு அதிகாரிகளோ எங்களிடம் இருந்து நேரடியாக கரும்பை பெறுவதில்லை, இடைதரகர்கள் மூலமாகவே வியாபாரம் நடைபெறும் சூழல் உள்ளதால் எங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றனர்.
மேலும் கரும்பை அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதுபோல் வட்டார அளவில் கரும்பு கொள்முதல் நிலையம் அமைத்து எங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *