தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் ஆகிய சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கலைச்சங்கமம் என்னும் மாபெரும் இசைக்கலை நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியது.

இக்கலைவிழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாநகர மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் 75 க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்துகொண்டு கரகாட்டம், பறையாட்டம், காளி,கருப்பு , சிவன், பார்வதி,தெய்வீக நடனங்கள், அரிச்சந்திரா இசைநாடகம் , நையாண்டிமேளம், நாட்டுப்புறப்பாடல் என பல கலைநிகழ்வுகள் சிறப்பாக நடத்தினர்.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி வளப்பக்குடி வீரசங்கர் வரவேற்றார். அவருடன் அறநிலையத்துறை துரை.கோவிந்தராஜ், கலைமாமணி டி.ஜெ.சுப்ரமண்யம், ஆலம்பாடி பி.எம்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவில் பேராசிரியர் செ. செந்தில்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *