கோவை

கோவையில் அன்னை மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை, ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் வாக்களிப்பதில் பெண்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…

அன்னை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சேவைகள் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது..

குறிப்பாக நடமாடும் மேமோகிராபி வாகனம் மூலம் பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் புற்றுநோய்,மகப்பேறு மருத்துவம்,பிசியோதெரபி,உடல் பருமன் சிகிச்சை தொடர்பான ஆலோசனை என முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நேரடி ஆலோசனைகளை வழங்கினர்.இலவச முகாமின் ஒரு பகுதியாக சுகாதாரத்துடன் இணைந்த ஜனநாயகக் கடமை எனும் நோக்கமாக ,எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெண்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

“வலிமையான சமுதாயத்திற்கு ஆரோக்கியமான பெண்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வலிமையான ஜனநாயகத்திற்கு பெண்களின் வாக்குகளும் முக்கியம்” என்ற கருத்தை இந்த முகாம் வலியுறுத்தியது குறிப்பிடதக்கது…

முன்னதாக நடைபெற்ற முகாம் துவக்க விழாவில்,மருத்துவர்கள் மதுலிகா விஜயகுமார், மகேஸ்வரி, மதன கோபால் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *