திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமூக சேவகி சரஸ்வதி ராஜேந்திரனின் மக்கள் பணியினை பாராட்டி பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் மகளிர் தின விழாவில் மக்கள் பணியில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கான விருதுகள் கலை கலாச்சாரம் மருத்துவம் விவசாயம் விளையாட்டு கல்வி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சேவையாற்றி வரும் 27 மகளிர்களுக்கு விருதுகள் வழங்கினார்கள்
அதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக நிர்வாகி சரஸ்வதி ராஜேந்திரன் தாராபுரம் பகுதிகளில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து குடும்பத்தில் ஒருவராக நின்று செய்த சேவையை பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் தலையில் மின்னும் கற்கள் கிரீடம் சூட்டப்பட்டு விருது வழங்கப்பட்டது
உடன் சசிகலா தில்லை முத்து பரமேஸ்வரி ராஜராஜன் பொதுமக்கள் ஆகியோர் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவியாக தற்போது பொறுப்பு வகித்து, சீரிய முறையில் களமாடி வரும் சரஸ்வதி இராஜேந்திரன் அவர்கள், கடந்த 1996ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர் தளபதியார் ஆகியோரின் ஆசியோடு, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராகக் களமிறங்கி, மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று, 2001ஆம் ஆண்டு வரையில், மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
விபரம் தெரிந்த நாளிலிருந்தே ‘கட்சிப் பணியே தனக்கான வாழ்க்கை’ என்று வாழ்ந்து வருகிற சரஸ்வதி இராஜேந்திரன் அவர்கள், சோதனையான காலகட்டத்திலும் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகளை தீரமுடன் முன்னெடுத்தவர். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த காலங்களில்கூட, எவ்வித சமரசமும் இல்லாமல், தேனீபோல் சுறுசுறுப்புடன் இயங்கி, களப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் தொய்வின்றி செயல்பட்டவர்.
காரை மண்ணில் சாதனைப் பெண் சரஸ்வதி ராஜேந்தரன்
யார் இந்த சரஸ்வதி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்த நாள் முதல் 2026 தேர்தல் களத்திலும் மிகுந்த உற்சாகத்துடன், ஊக்கத்துடன் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக பணியாற்றி வரும் சரஸ்வதி ராஜேந்திரன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தி.மு.க.,வின் விசுவாசிகள் என்பதால், விபரம் தெரிந்த நாள் முதலே இயக்கத்தின் மீதான பற்றும் இதனால், 1981ஆம் ஆண்டில், முறைப்படி கழகத்தில் இணைத்துக் கொண்டார்
கணவர் இராஜேந்திரன் குடும்பத்தாரும் தி.மு.க. தொடங்கிய முதல் பரம்பரை தலைமுறை தலைமுறையாக கழகப் பணியாற்றி வருகிறார்கள் அதன் தொடர்ச்சியாக திருமணத்திற்கு முன்பும் சரி, அதன் பின்னரும் சரி, என் களப்பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படவில்லை. மேலும், என் மாமனார், பேரறிஞர் அண்ணாவை அழைத்து வந்து, தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் கழகக் கொடியேற்றியவர் என்ற பெருமையும் எங்கள் குடும்பத்திற்கு உண்டு” எனக் கூறிய சரஸ்வதி இராஜேந்திரன் அவர்களின் முகத்தில் அத்தனை பெருமிதம். விருது வாங்கிய செய்தி அறிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.