தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காததால் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம்.
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம். மாவட்டச் செயலாளர் காளிமுத்து தலைமையில்
தாராபுரம் நந்தவனம் பாளையம் பஞ்சாயத்து காசிலிங்கம் பாளையம் கிராமம் நாவிதன் புதூரில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்ரிடம் தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்தும் வீட்டுமனை பட்டா கிடைக்காத அவலநிலையில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் 30 குடும்ப மக்களுக்கு நாவிதன் புதூரில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளதால் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.