எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் அரசு உதவி பெறும் சீனிவாச மேல்நிலைப்பள்ளி உள்ளது
இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான இலவச மிதிவண்டி 350 மாணவ மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார் பிரபாகரன் அப்துல் மாலிக் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்