புதுச்சேரி,புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 6ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம், உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்ததுடன், போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த விழாவில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கிளை செயலாளர் காந்தி, ஊர் பஞ்சாயத்தார்கள் அனந்த், அருள், ராஜாராம், கருணாகரன், வடிவேல், ஊர் இளைஞர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் விழா நிகழ்ச்சி தமிழ்த்தாய் நகர் மக்களிடையே பெரும் உற்சாகத்தையும், ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியது.