கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு பதவிகளில் பணி புரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து எஸ்டேட்டில் நடைபெறும் ஊர் திருவிழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றனர்
இந்நிலையில் நடந்து முடிந்த பொங்கல் திருவிழாவை சிறப்பிக்க அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியதோடு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பென்சில்,பேனா, பவுச் மற்றும் ஷூ ஆகியவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவி ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியர் காட்வின் ஆகியோர் முன்னிலையில் வழங்கி அக்காமலை நண்பர்கள் சிறப்பித்துள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் நண்பர்களை பாராட்டி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர்