​நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இவ்விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும் கொண்டாடப்பட்டது
.
​இந்த விழாவில்
​சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் பிரபல ஆன்மீகவாதி அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுபாஷ் சந்திரபோஸ், த.க.இ.பெ. மாநிலச் செயலாளர் தோழர் கங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​மேலும், ஹமீம் முஸ்தபா, சொக்கலிங்கம், பூதை நாகராஜன், என்.டி. ராஜ்குமார், நாராயணபெருமாள், மருத்துவர் அழகுநீலா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ராமன். முருகன். அருணாச்சலம், மற்றும் அனில் குமார், ஜீவனந்த், கலைவாணன், லதா கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​சிறப்பு கருத்தரங்கம்:
​விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவர் அமுதா, நிஷா, செந்தளிர் இந்திரா, ராமன், முருகன் மற்றும் அருணாசலம் ஆகியோர் உரையாற்றினர். சமூக மாற்றத்தில் கலை மற்றும் இலக்கியத்தின் பங்கு குறித்து ஆழமான கருத்துகள் இக்கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.

​நூல் வெளியீடு:
​விழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன:
​ காருபாறை கிளையின் 50 ஆண்டுகால கலைப் பயணத்தைப் பதிவு செய்யும்பொன் ஆவணம் என்ற வரலாற்று நூல்.மற்றும்
​ முற்போக்கு மேடைகளில் பாடப்பட்ட எழுச்சிமிக்கப் பாடல்களின் தொகுப்பான தெரு பாடல்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். அருணாச்சலம் அவர்கள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய சிறுகதை நூல்.​ஏய் சொல்லு சொல்லு!? ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன

மேலும்
​”வெறுப்பின் இடத்தில் அன்பை விதைத்து தேசம் காப்போம்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. கிளையின் முன்னோடிகள் கௌரவிக்கப்பட்டனர். நாஞ்சில் நாதம் மற்றும் ஆற்றுப்பாலன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு மெருகூட்டின.
​மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் காருபாறை கிளையின் இந்தப் பொன்விழா, அப்பகுதி மக்களின் பேராதரவோடும் தோழர்களின் அர்ப்பணிப்போடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *