தேனி நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ரேணு ப்ரியா பாலமுருகன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மதீப்பீடு தொகை ரூபாய் 1.42. கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் மூலம் பணிக்கான செலவினத் தொகை நகராட்சி குடி நீர் மற்றும் வடிகால் நிதியில் இருந்து செலவினம் மேற்கொள்ள மன்ற அனுமதி நகராட்சி வார்டு எண் 1 முதல் 33 வரை உள்ள அனைத்து பகுதிகளுக்கு மேல் நிலை தொட்டி மூலம் குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்படும் குடிநீர் கழிவு கள் உள்ளிட்ட மரமாத்து பணிகள் 2026.2027. ஆண்டுகளுக்கு பணிகள் மேற்கொள்ள ரூபாய் 14 லட்சம் குடிநீர் நிதியிலிருந்து பணி மேற்கொள்ள மன்ற அனுமதி நகராட்சி மயானக்கரை சாலையில் உள்ள இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள தயார் செய்யப்பட்ட மதீப்பீடு ரூபாய் 21 லட்சத்தினை நகராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள மன்ற அனுமதி உள்பட 52 தீர்மானங்கள் 33 வார்டு கவுன்சிலர்கள் அனுமதியுடன் அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகராட்சி ஆணையாளர் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடனுக்குடன் பதில் அளித்து கவுன்சிலர் களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர் கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட நகர் மன்ற 33 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *