தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டாவின் வழங்கினார்.

தூத்துக்குடி மரக்குடி தெருவில் உள்ள பழமை வாய்ந்த செபஸ்தியார் கெபி திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான செபஸ்தியார் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு செபஸ்தியார் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமை தாங்கினார் செயலாளர் சசி முன்னிலை வைத்தார் இதில் பனிமயமாதா பேரால பங்கு தந்தை ஸ்டார்வின் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

இதை தொடர்ந்து ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் பங்குத்தந்தை ஸ்டாவின் வழங்கினார் இதை தொடர்ந்து 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது. முடிவில் குருஸ் பர்நாந் நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியினர் வர்கீஸ், பிராங்கிளின், தினேஷ், கிராசிங்டன், ஆரோண், வளன், ஆண்ட்ரூஸ், ஜெனிஸ், அரவிந்த், ஸ்வீட்டஸ், ஜேபி, அஜித், ஸ்டெபி, ரியாஸ், கிரஸ்வின், அஜய், ஜாய்சன், ஜஸ்பர், சோல்ஜர், டேனி, ஜாய்சன், செல்ட்டன், மோத்தா, கேஸ்ட்ரோ மகளிர் அணிவெர்ஜின், விஜிலியா, ஜெசிந்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.‌

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *