மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப் பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா இன்று (21-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற பிப்.1-ந் தேதி வரை நடக்கிறது.
கொடிமரத்தில் திருவிழா விற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் அடுத்த மாதம் 26-ந் தேதி சைவ சமய ஸ்தா பித வரலாற்று லீலையும், 28-ந்தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. 30-ந்தேதி தெப்பத்திருவிழா விற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 31-ந்தேதி சிந்தாம ணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.

தை மாத விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் பிப்.1-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப் பட்ட தெப்பத்தில் சுவாமி யும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒருமுறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகமும்,
செய்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *