மதுரை, சமயநல்லூர் அருகே கார் மீது அரசுப் பஸ் மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.

கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்துக்கு அர பஸ் வந்து கொண்டிருந்தது. சமயநல்லூர் அருகே கட்டப்புலிநகர் மேம்பால பகுதியில் வந்த போது, முன்னால் சென்று கொண் டிருந்த காரை முந்திச் செல்வதற்கு பஸ் டிரைவர் முயன்றார். அப்போது பஸ் திடீரென எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பின் மீது ஏறி காரின் மீது மோதி அரசு பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ், கார் டிரைவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *