புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி

ஆசையே அழிவுக்குக் காரணம் !என்றேன்
அகிலத்தில் பேராசைப் பிடித்து அலைகின்றனர்

என் போதனைகளை மறந்து விட்டு
எனக்கு பிரமாண்ட சிலைகள் எதற்கு ?

என் பொன்மொழிகளை கொன்று விட்டு
எனக்கு பெரிய ஆலயம் கட்டி என்ன பயன் ?

வாழ்க்கையின் நோக்கம் உதவுவதே ! என்றேன்
வாழ்கையில் பலர் கடைபிடிக்க வில்லை

எல்லாம் தெரியும் என நினைப்பவன் மூடன் ! என்றேன்
எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்கின்றனர்

பிறருக்கு துன்பம் தரக் கூடாது ! என்றேன்
பிறரை துன்புறுத்தி இன்புறுகின்றனர்

தீய செயலை செய்தவர் தப்பிக்க முடியாது ! என்றேன்
தீய செயலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்

தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு நேராது என்றேன்
தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு செய்கின்றனர்

தன்னை அடக்கத் தெரியாதவன் மனிதனன்று ! என்றேன்
தன்னை அடக்கத் தெரியாமல் விலங்காகி விட்டனர்

நேர்மையும் நம்பிக்கையும் இரு விழிகள் ! என்றேன்
நேர்மையை மறந்து நம்பிக்கை துரோகம் புரிகின்றனர்

ஒழுக்கம் உள்ளவர்களுடன் உறவாடுங்கள் ! என்றேன்
ஒழுக்கம் கெட்டவர்களுடன் உறவாடுகின்றனர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது ! என்றேன்
பகைமை வெறி பிடித்து அலைகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *