தூத்துக்குடி மாநகரில் மொத்த விற்பனை செய்கின்ற கடைகள் ஏராளமாக உள்ளது அந்த கடைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக இன்று வரை விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது குறிப்பாக மாநகராட்சி மைய அலுவலகத்தை சுற்றியுள்ள மொத்த விற்பனை கடைகளில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோல மாநகராட்சிக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் பொதுமக்களுக்கு கேரி பையில்தான் பொருட்கள் கொடுக்கப்படுகிறது
இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாதா ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் மொத்தத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் தான் ஆனால் அதனை பாரபட்சம் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகவே உள்ளது சில மாதங்களாக தடை செய்யப்பட்ட கேரி பை பக்கீல் ஓடையில் இல்லாமல் இருந்தது தற்போது கடந்த 15 நாட்களாக பக்கீல் ஓடை முழுவதும் கேரி பை உள்ளது
ஆகையால் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் பாரபட்சம் என்று மாநகராட்சி தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்க வேண்டும். மாநகராட்சி மேயர் ஜெகன் பேப்பர் கவர் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கேரினப என்பது சர்வசாதாரணமாக விற்பனை நடைபெற்று கொண்டு தான் வருகிறது