கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் அரசு கலைக் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில், இந்திய மின் பகிர்மான நிறுவனக் குழுமமான Power Grid Corporation of India Ltd. நிறுவனத்தின் CSR நிதி உதவியின் மூலம் சுத்தம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) orன்ற தலைப்பின் கீழ் ரூ.9.98.750/- மதிப்பில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டு, அதற்கான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சா. சுதா தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் செழியன் முன்னிலை வகித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்.பவர் கிரிட் தென் மண்டல தலைமைப் பொது மேலாளர் கணேசன்,மனிதவள மேலாண்மை பொது மேலாளர் திருதன்வீர் பண்டயாப்புரத் மற்றும் துணைப்பொது மேலாளர் அருள்குமரன் ஆகியோர் ஆய்வக உபகரணங்களை கல்லுரி முதல்வர் முனைவர் சா. சதா அவர்களிடம் வழங்கி வாழ்த்துரை ஆற்றினர்.
துறைத் தலைவர் முறைகள் உணவு ஊட்டச்சத்து மற்றும் முனைவர் கு-ஜாகிர் உசேன்.கல்லூரி ஆராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.கார்த்திகேயன், கல்லூரி நூலகர் முனைவர்அ.சரவணன், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறைப்பேராசிரியர்கள் முனைவர் தர்ஷினி, ராஜேஸ்வரி,செல்வி புவனேஸ்வரி, முனைவர் ரேனுகா தேவி.செல்வி ஸ்ரீநிதி ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
புதியஉபகரணங்களுடன் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை பவர் கிரிட் தென் மண்டல தலமைப் பொது மேலாளர் கணேசன், மனிதவள மேலாண்மை பொது மேலாளர் தன்வீர் பண்டயாப்புரத் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இந்த ஆய்வக திறப்பு விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்