தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 1498 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து கல்லூரி வாரியாக மடிக்கணினிகள் வழங்கப் பட்டு வருகிறது இதனடிப்படையில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பயிலும் 412 மாணவர்களுக்கும் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பயிலும் 360 மாணவர்களுக்கும் உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பயிலும் 654 மாணவர்களுக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 72 மாணவிகளும் என மொத்தம் 1498 கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மடிக்கணினி வழங்கினார்

தேனி மாவட்டத்தில் இது வரை 3646 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *