செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலகத்தில் 77 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
இதில் மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மண்டல அதிகாரி குமாரசாமி பொறியாளர் ஆனந்த ராவ், உதவி செயற்பொறியாளர்கள் குமார் ,சரவணமூர்த்தி ,தேவிகலா ,லோகநாதன், ராம்கி திவாகர் உட்பட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்களும் துப்புரவு பணியாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் காந்திஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில் பள்ளி சிறார்களுக்கு நோட்டு புத்தகங்களை மண்டல குழு தலைவர் நந்தகோபால் வழங்கியும் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.