இந்திய 77 வது குடியரசு தின விழா முன்னிட்டு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை கழக அலுவலகம் மற்றும் நேதாஜி நகர் குடிவாழ்வு நல சங்கம், எர்ணாவூர் நாடார் உறவின்முறை சங்கம், டி எஸ் எஸ் நாடார்கள் ஐக்கிய சங்கம், வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம், நேதாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம், பாரத் நகர் குடி வாழ்வோர் நல சங்கம், எர்ணாவூர் பஜார் வீதி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள், தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் துணை செயலாளர் பிரபு மற்றும் சங்க உறவின்முறை கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்