ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.
மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்.
அசோசியேஷன் நிர்வாகிகள் அ.முஹம்மத் தமீம், எச்.முஹம்மத் ஹாஷிம், யி.முஹம்மத் ஹலீம், வி.அன்சர் அஹ்மத் மற்றும் யி.முஹம்மத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அசோசியேஷன் துணைத் தலைவர் கே.முஹம்மத் இத்ரீஸ் வரவேற்புரையாற்றினார்.*
சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய இந்தியக் கடற்படை தளபதி, முதுநிலை உயர் அலுவலர் ஓய்வூதிய துறை -III, பணியாளர் அதிகாரி (DUA), மும்பையின் மான்குர்டில் உள்ள சீட்டா கேம்ப்பில் இருந்து வருகை தந்த தளபதி திரு.சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து மேல்விஷாரம் நகராட்சி ஆணையர் திரு.பழனி அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து அசோசியேஷன் பொருளாளர் ஜி.முஹம்மத் பஹிம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து அசோசியேஷன் துணை செயலாளர் கே.ஓ.நிஷாத் அஹ்மத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.