கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேசியக் கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை மாநகராட்சி 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ. மாரிசெல்வன் கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பொது சுகாதாரக் குழு தலைவர்
பெ.மாரிசெல்வன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவசகாயம், மற்றும் தனலட்சுமி, ஆசிரியர்கள், பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வார்டு செயலாளர் நா. தங்கவேலன், ராஜேஷ் வை.இளங்கோ, கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.