C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கல்வி ஆண்டில் பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்று வரும் தலைமை ஆசிரியர் திருமாவளவன் அவர்களின் பணிகளை பாராட்டி குடியரசு தினமான இன்று அவர்களுக்கு பாராட்டு நற்சான்று வழங்கப்பட்டது. சான்றை பெற்ற திருமாவளவன் தமிழக அரசுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அவர் ஆற்றிய பணிகள் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம், அதிக மதிப்பெண்கள் பெற வழி வகைகள், காலை,மாலை சிறப்பு வகுப்புகள் நடத்துதல்
வரும் கல்வி ஆண்டில் 2026-ல் 100 விழுக்காடு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது என்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற குடியரசுத்தினத்தன்று பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன்
உறுதிமொழி ஏற்றார்.