கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம்
மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு
தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வழங்கும் வகையிலும்,தொழில் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் கோவையில் ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி மற்றும் உச்சி மாநாடு கொடிசியா அரங்கில் நடைபெற்றது…
ஜனவரி 29 துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில், தொழில் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் ஒரு தனித்துவம் கொண்ட கண்காட்சியாக நடைபெறுகிறது..
மூன்றாவது எடிஷனக நடைபெறும் கண்காட்சியில் ஸ்டார்ட் அப் நிலையில் உள்ள நிறுவனங்கள் முதல் சிறு மற்றும் நடுத்தர அளவில் உள்ள தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் வரை பங்கேற்று உள்ளனர்..
சுமார் 300 க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஜவுளி, உணவு, சுகாதாரம்,பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் என உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் துறையினர் தங்களது தொழில் சார்ந்த தகவல்களுடன் காட்சி படுத்தி, விளக்கவுரை வழங்க உள்ளனர்..
முன்னதாக ஜூபிலியண்ட் கண்காட்சி துவக்க விழாவில், அபு தாஹிர், ராம்குமார் , இம்தியாஸ் ஹமீத்,சந்தோஷ் ராதாகிருஷ்ணன்,முகமது நாசர்,. சதீஷ் குமார் டாக்டர் தீபக் வோஹ்ரா, ஹமீன் பரூச்சா, இர்பான் மாலிக்,கார்த்திகேயன், அலெக்ஸாண்டர் டோடோனோவ், அப்தல்லா புகாரீர், எம்.ஜி. ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்…
இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம், முதலீடு, கூட்டாண்மை, புது வியாபார தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல வாய்ப்புகளை பெற்று அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.