தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46வது வார்டு பகுதியில் 2024ம்
ஆண்டு குடிநீர் பைப் லைனிற்காக 247 வீட்டு பொதுமக்களிடம் ரூ.24000 வீதம் ரூ.59 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி, அதிமுக மாநகர மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், 46வது வார்டு வட்ட கழக செயலாளருமான புல்டன் ஜெசின், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரியங்காவை சந்தித்து இன்று மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது., தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46வது வார்டு பகுதியில் பாத்திமா நகர், இந்திராநகர், கணேசபுரம், வாடித்தெரு, ஜார்ஜ் ரோடு, ஜார்ஜ் ரோடு எக்ஸ்டென்சன், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதிகளில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பிற்காக ஒரு வீட்டிற்கு ரூ.24,000 பணமாக மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் 247 வீடுகளில் ரூபாய் 59 லட்சத்து 28000 பணத்தை மாநகராட்சி பெயரைச்
சொல்லி வசூலித்துள்ளனர்.

இந்த வார்டில் வசிக்கும் பொதுமக்கள் மீன் தொழில், கூலி தொழில், வீட்டு வேலை போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வேலைகளில் குறைவான சம்பளத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2024ல் புதிய நீலக்கலர் குடிநீர் பைப் இணைப்பதற்கு கண்டிப்பாக உடனடியாக ரூ.24,000 பணம் கட்டினால் தான் புது குடிநீர் பைப் லைன் உங்கள் வீட்டிற்கு போட முடியும், இல்லையென்றால் குடிநீர் வழங்க முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் வட்டி, சிட்டைக்கு பணம் வாங்கி அந்த வார்டில் சுமார் 247 வீட்டுகளில் துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து பணம் வசூலித்துள்ளார்கள்.

2024ம் ஆண்டு பொதுமக்கள் பணம் கொடுக்கும் போது இந்த புது குடிநீர் பைப் லைனுக்கு அத்தாட்சியாக மாநகராட்சி குடிநீர் இணைப்பு அட்டை ஒரிஜினல் எப்போது
கிடைக்கும் என்று கேட்ட போது துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் இன்னும் 15 நாட்களுக்குள் உங்களுக்கு ஒரிஜினல் குடிநீர் அட்டை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். 18 மாதங்கள்
பூர்த்தியாகியும் இதுவரையில் மேற்படி வார்டு பொதுமக்களுக்கு உரிய ஆவணம் இன்னும் கையில் வந்து சேரவில்லை.

இது மிகப்பெரிய இமாலய ஊழல். பொதுமக்களிடம் அவர்கள் நிலமையை பயன்படுத்தி பதவியின் பலத்தைக் கொண்டு மக்களை மிரட்டி இந்த நொடி வரையும் அவர்களுக்கு ஆவணங்கள் கையில் வந்து சேரவில்லை. 2 மாதங்களில் வாங்கி
தருகிறேன் என்று பொதுமக்கள் கேட்கும் போதெல்லாம் இதையே சொல்லி காலம் கடந்தி வருகிறார்கள், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் செல்வராஜ். எனவே, மாநகராட்சி ஆணையர் அவர்கள், பாத்திமாநகர் 46வது வார்டு பகுதியில்
பொதுமக்களிடம் தலா ரூ.24000 பெற்று மோசடி செய்துள்ள விசயம் குறித்து உடனடியாக தணிக்கை குழு அமைத்தும், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அவரது
கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரிஜினல் குடிநீர் அட்டை உடனடியாக கிடைக்க ஆவண
செய்ய வேண்டும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த நேரிடும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *