முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில் குமார்
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு வைகை விவசாய சங்கம் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இப் போராட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது அதனை தொடர்ந்துவட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் தமிழ்நாடு வைகை விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது
இதில் மைக்கேல் மாநில கவுரவ தலைவர் மரகத வேலு மாவட்ட செயலாளர் கோவிந்தன் மாவட்ட தலைவர் முனியசாமி கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் மூவேந்திரன் முதுகுளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மோகன் தாஸ் கமுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பூமி சேகர் கமுதி வட்டார விவசாயி முருகேசன் செல்வநாயகபுரம் இதில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் நடப்பாண்டு சம்பா பருவ சாகுபடி பகுதி மழையின்றி நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட நெற்கதிர்களுக்கு ஏக்கருக்கு தல 25 ஆயிரம் வழங்கவும் பருவமழையின்றி முற்றிலுமாக பாதிக்கப்பட்ட சம்பா பருவ விவசாயிகளுக்கு முழுவதுமாக வேளாண் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும் குண்டாறு வடிவ உபகோட்ட தொகை 16 கோடியை ரகுநாத காவிரி கால்வாய் தூர்வார முழுமையாக மராமத்து செய்ய வேண்டியும் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து கம்மாய்களுக்கும் வைகை தண்ணீர் ஆண்டுதோறும் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வட்டாட்சியர் கோகுல்நாத் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர் இதில் பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்