திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி, ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, பத்மஶ்ரீ புரிசை கண்ணப்ப சம்பந்தன் பங்கேற்று, தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெருக்கூத்து கலையை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆ.முரளி, ஸ்ரீமாந்த், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, எக்ஸ்னோரா நிர்வாகிகள் சு.தனசேகரன், மலர் சாதிக், தமுஎகச துணைத் தலைவர் கவிஞர் தமிழ்ராசா, ஆசியன் இன்ஸ்டிடியூட் முதல்வர் ஆசியா பர்வீன், ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு.சதானந்தன், திரைப்பட இயக்குநர் விஜய் ஆதிநாதன், ஆசிரியர் மகாவீர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் தேசிய அளவிலான ஃபெடரேஷன் ஊசூ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி விவேகாஸ்ரீ-க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் துணைத் தலைவர் எ.தேவா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.