பா. வடிவேல், அரியலூர் – செய்தியாளர்.
அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கைக்கோளர் செங்குந்தர் மாவட்ட சங்கத்தின் சார்பில், நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்புமிகு போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு திமுக அரியலூர் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் திரு. தங்க இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள், மின்சார கட்டண சலுகை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, அரசு மானியத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துதல், நெசவாளர் குடும்பங்களின் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அரியலூர் மாவட்ட செங்குந்தர் சங்கத்தின் தலைவர் திரு. ஏவிஎம் சாமிநாதன், திமுக நகர செயலாளர் வெகொ கருணாநிதி, ஒன்றிய செயலாளர் திரு. தனசேகர், திமுக தலைமை கழக பேச்சாளர் திரு. பழ. புனிதம், நகர அவை தலைவர் திரு. ஞான பிரகாசம், கழக பேச்சாளர் திரு. தீப்பொறி ராமலிங்கம், செங்குந்தபுரம் கிளை செயலாளர் திரு. எஸ். நடராஜன் மற்றும் திரு. சுரேஷ், நெசவாளர் அணி பஞ்சநாதன் திமுக நகர துணை செயலாளர் காசிநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நெசவாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நெசவாளர்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்த அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அவர்கள், கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பு நெசவாளர் சமூகத்தில் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.