சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் கொளத்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மத்திய அரசு நீக்கி புதிய பெயர் வைத்ததை கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினர் கேபிஎன். மகேஸ்வர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொளத்தூர் வட்டாரத் தலைவர் எஸ் எஸ் மோகனன். ஐ என் டி யு சி மின் வாரிய மாநில பொருளாளர் பாலசுப்பிரமணி. வட்டாரப் பொறுப்பாளர் லாரன்ஸ். நகரத் தலைவர் ஜெயக்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை 100 நாள் வேலை திட்டத்தில் நீக்கியதை கண்டித்தும் அவர் பெயரை நீக்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மணி என்கிற ஈஸ்வரன் புலவர் சுப்ரமணி சின்னத்தண்டா சிவகுமார் காவேரி கிராஸ் ரமேஷ் குமார் முருகன் சின்னத்தண்டா சிவக்குமார் மகளிர் அணி தேவி ராணி செல்லம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.