செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ.110 பெரும்பேர்கண்டிகை கிராமத்தில்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீதர்மசாஸ்தா நூதன ஆலய
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சுவாமி திருவீதி உலா
வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய் கிழமை காலை மங்கள இசை,விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கோபூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்,பூர்ணாஹுதி, தீபாராதணை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்று
மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தணம், கும்பஅலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜை ஆரம்பம் கோபுர கலசம் பதிவித்தல், யந்திரஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை, பூர்ணாஹூதி, தீபாராதணை பிரசாதம் வழங்குதல் காலை 7.00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம்,நாடி சந்தானம், தத்துவார்ச்சனை அவப்ருத யாகம், ஸ்பர்சாஹீதி, யஜமானர் சங்கல்பம், முடிந்து புதன்கிழமை 10.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி,யாத்ராதானம் கலசம் புறப்படுதல் விமான கும்பாபிஷேகம் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்று காலை11.10 மணிக்கு மூலவர் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஸ்ரீ தர்மசாஸ்தா கும்பாபிஷேகம் சர்வ சாதகம் சிவஸ்ரீ ஆர்.ரவிச்சந்திர சிவாச்சாரியார்,சிவஸ்ரீ ஆர்.சங்கர சிவாச்சாரியார்,சிவஸ்ரீ பி.வேதமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோரின்
தலைமையில் பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்து மாரியம்மன்,ஸ்ரீ தர்மசாஸ்தா விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரவி, சுந்தர், குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.